Sunday, 16 June 2013

ஈழத்தமிழர்கள் சீமானுக்கு செருப்பாலடிக்க வேண்டும்


வணக்கம் நண்பர்களே நீண்ட காலமாக வலைப்பதிவுப் பக்கம் வரவில்லை. மீண்டும் தூசு தட்டி வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்ன எண்ணம் வந்திருக்கின்றது. பல நண்பர்கள் எனது எழுத்துக்களை காணவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தனர். சரி இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.


என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினாராம் மறைந்த இயக்குனர்

மணிவண்ணன்
................................?
மணிவண்ணனின் உடலில் விடுதலைப் புலிகளின் கொடி! கடைசி ஆசை நிறைவேறியது ..................................................?

இதுதான் இன்று பரவலாக ஊடகங்களில் பேசப்படுகின்ற விடயம். 

உண்மையிலேயே மணிவண்ணனின் இறப்பு அரசியலுக்கு அப்பால் பேசப்படவேண்டிய விடயம் மணிவண்ணன் இறப்பில்கூட சாதி வெறிபிடித்த சீமான் அரசியல் நடாத்த நினைத்திருப்பது. மணிவண்ணனின் இறப்பில் சீமான் ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் நடாத்தும் சீமானின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

உண்மையில் மணிவண்ணன் அவர்கள் ஒரு சிறந்த ஈழத்தின்மீதும், ஈழத்தமிழர்கள் மீதும் அதிக பற்றுக் கொண்டவர். அவர் குறிப்பிட்டிருக்கின்றார். நான் இலங்கையில் பிறந்திருந்தால் புலிகளுடன் சேர்ந்து போராடியிருப்பேன் என்று. ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் மணிவண்ணன் அவர்களுக்கு நாம் தலை வணங்கவேண்டியவர்கள்.

ஆனால் சீமான் ஈழத்தமிழர்கள் மீது அதிக அக்கறை கொண்டு செயற்படுவதுபோன்று பல நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றார். சீமானுக்கு எப்போது வந்தது இந்த ஈழ மக்கள் மீதான அக்கறை அப்படி அக்கறை இருந்திருந்தால் புலிகளோடு சேர்ந்து போரடியிருக்கலாமே. 

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்தபின்னர்தானா இவருக்கு இந்த அக்கறை வந்தது. சீமான் தன்னை பிரபாகரனின் நிலைக்கு ஒரு தலைவனாக தன்னை உயர்த்திக் கொள்ள பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். பிரபாகனுக்குப் பின்னர் தமிழர்களின் தலைவர் சீமான் எனும் ஒரு மாய விம்பத்தை தோற்றுவிக்க நினைக்கின்றார் சீமான்.

இப்போது விடயத்துக்கு வருகின்றேன். மணிவண்ணன் தனது கடைசி ஆசையாக தான் இறக்கும்போது தனது உடலில் விடுதலைப் புலிகளின் புலிக்கொடி போற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். என்று ஊடகங்கள் எழுதுகின்றன.

விடுதலைப்  புலிகளின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் என்பவற்றிற்கு தனி ஒரு மரியாதை இருக்கின்றது. புலிக்கொடி யார் யாருக்கெல்லாம் போற்றப்பட வேண்டும், யார் புலிக்கொடியைப் போற்றலாம் என்று புலிகள் ஒரு வரையறையினை, கட்டமைபிபனை வைத்திருக்கின்றனர்.

அவற்றை பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்ட விடயங்களை அப்படியே தருகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பும், அதன் மத்திய குழுவும், தலைமையும் செயல் நிலையில் இருந்தபோது யாருக்கு அவர்களது அமைப்பின் புலிக்கொடியை போர்த்துவது அவருக்கு என்ன பதவி கொடுப்பது என்பதை முடிவு செய்தார்கள்.


அவர்கள் அரங்கில் இல்லாத நிலையில் யாருக்கும் அந்த இறுதி மரியாதைக்கு போர்த்தும் அதிகாரமில்லை. கடந்த காலங்களில் இறுதி மரியாதைக்கு தாயின் மணிக்கொடியை வித்துடலுக்கு சாத்துபவர் தலைவராகவோ அல்லது தலைவரால் பணிக்கப்பட்ட ஒருவராகவோதான் இருப்பார். 

2002ம் ஆண்டுகளில் புலிகள் தேசியக்கொடி தேசியகீதம் தொடர்பாக பகிரங்க சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டனர். மக்கள் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் முதலானவர்களுக்கு கொடிசாத்துவது தொடர்பாக தலைமையே முடிவுசெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொது நிகழ்வுகளிலும் யாரும் அந்தக்கொடியை கொடியின் கண்ணியம் குறையாத வகையில் பயன்படுத்தலாம். 

மணிவண்ணன் அவர்களின் விடயத்தில் என்ன நடந்திருக்கின்றது. சீமான் அவர்களினால் மணிவண்ணன் அவர்களின் இறுதி ஆசைக்கிணங்க விடுதலைப்புலிகளின் புலிக்கொடி போற்றப்பட்டதாக ஊடகங்கள் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

சீமான் விடுதலைப் புலிகளின் புலிக்கொடி என்று சொல்லி தனது கட்சிக் கொடியினை மணிவண்ணனின் உடலில் போற்றி இருந்தால்

சீமானிடம் கேட்கின்றேன் உங்கள் கட்சிக்கொடி எப்போது விடுதலைப் புலிகளின் புலிக்கொடியாக மாறியது. சீமான் அரசியல் நடாத்துவதாக இருந்தால் ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் வைத்து அரசியல் நடாத்த வேண்டாம்.


சீமான் உண்மையான தமிழனாக இருந்தால் ஈழத்தமிழர்களின் கண்ணீரிலும் குருதியிலும்  தனது கட்சியை வளர்க்க வேண்டாம். புலிகளையும், ஈழத்தமிழர்களையும் அடவு வைத்து சீமான் தனது கட்சியை வளர்க்க ஆடும் கபட நாடகங்களை நம்பி ஈழ ஆதரவாளர்கள் பெருந்தொகை பணத்தின நாம் தமிழர் கட்சிக்கு அனுப்புவது மிகவும் கவலைக்குரியது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈழத்தமிழர்கள் சீமானுக்கு செருப்பாலடிக்க வேண்டும்"

Post a Comment