Wednesday, 8 February 2012

ஆடைகளை களைந்து இன்பம்காண அழைக்கும் தமிழ் இணையத்தளம் பெண்கள் உசார்… படங்கள் இணைப்பு


படத்தில் இருக்கும் சொற்களுக்கு மன்னிக்கவும் 
கலாசார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என்று எழுதுகின்ற இணையத்தளங்களும் அதனுடன் தொடர்பு பட்டவர்களுமே மறு புறத்தில் சமூக சீர்கேடான விடயங்களை செய்து வருகின்றனர். என்னுடைய

தமிழ் பெண்களின் நிர்வாண படங்களை விற்பனை செய்யும் இணையத்தளத்திலிருந்து உங்கள் மனைவி பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள். எனும் முன்னைய பதிவிற்கு சிலர் தேவையற்ற சிதத்தில் மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். அப்பதிவிற்கான சில விளக்கங்களை இங்கே தருகிறேன்.


இன்று அரட்டை இணையத்தளங்களில் பரவலாக ஆடை களையப்படுகின்றன. அரட்டை இணையத்தளங்களில் அரட்டை அடிப்பதற்கு வருகின்ற பலர் செக்ஸ் அரட்டை அடிப்பதற்கென்றே வருகின்றனர். இதில் ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசமின்றி செக்ஸ் அரட்டையில் ஈடுபடுகின்றனர். இங்கே இளம் பெண்களின் ஆடைகள் மட்டுமன்றி திருமணமான பல பெண்களும் தமது ஆடைகளை களைகின்றனர். இதனை பல தமிழ் இளைஞர்கள் கிழடுகள் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு இரசித்தக்கொண்டிருப்பவர்களின் மனைவி மக்கள் தங்கைகள் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய இடம் கொடுப்பார்களா? இவ்வாறான இணையத்தளங்களை செய்பவர்கள் இவ்வாறு பணம் உழைப்பதனை விடத்து தமது மனைவி மக்களை வைத்து விபச்சார விடுதி நடாத்தலாம்.

எனக்கு ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் அதிலே அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கின்றது. அதனை எவரும் கட்டுப்படத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவனோ ஒருத்தியோ தன் உடலை யாருக்கு காட்டினாலும் அதனை கட்டுப்படுத்தும் உரிமை எவருக்கும் இல்லை. என்று குறிப்பிட்டிருந்தார். சரி இணையத்தில் செக்ஸ் அரட்டை செய்வது தவறா தவறு இல்லையா?

இது அப்படியே இருக்க விடயத்துக்கு வருகிறேன். சமூக சீர்கேடு தமிழிழம் தமிழர்கள் என்றெல்லாம் எழுதி வரும் லங்காசிறி இணையத்தளம் மறு புறத்திலே பல சமூக சீர்கேடுகளைச் செய்து வருவதை சமூக ஆர்வலர்கள் எவரும் கண்டுகொள்வதில்லையா? லங்காசிறி வருமானத்திற்காக எதனையும் செய்யும் என்பதற்கு அதன் மற்றொரு இணையத்தளம் சான்றாகின்றது. வெறுமனே தமிழர்களின் உரிமைக்காக தமிழர்களுக்காக தமிழீழத்துக்காக எழுதுகிறோம் என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றி பணத்தினை உழைத்துக்கொண்டு மறு புறத்தில் பாரிய சமூக சீர்கேடுகளை செய்து வருகின்றார்கள்.

இவர்களால் செய்யப்படும் மற்றுமொரு இணையத்தளம்தான் Hi2 Chat இணையத்தளம். இந்த அரட்டை இணையத்தளத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள் அங்கே இணைய விபச்சாரம் நடக்கின்றது. அங்கே ஆடைகள் களையப்படுகின்றன. இந்த இணையத்தளத்தில் அரட்டை அடிப்பவர்கள் பலர்  செக்ஸ் அரட்டைக்காகவே இங்கே வருகின்றனர். ஆண்கள் மட்டுமல்ல பல தமிழ் பெண்களும் செக்ஸ் அரட்டையில் ஈடுபடுகின்றனர். 

அவ் இணையத்தளத்திற்கு ஒரு முறை பெண்ணின் பெயருடன் சென்று பாருங்கள் அங்கே உங்களிடம் எவ்வாறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. உங்களுக்கு யார் யார் எல்லாம் எதை எதை எல்லாம் காட்டுகின்றார்கள் என்பதனை எல்லாம் பாருங்கள். ஆண்கள் மட்டுமல்ல அங்கே பல இளம் பெண்களும் தமது ஆடைகளை களைகின்றனர். அங்கே இருக்கின்ற பெண்களிடம் பேசிப்பாருங்கள் அவர்களே தானாகவே உங்களை செக்ஸ் அரட்டைக்கு கூப்பிடுவார். 

நான் இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்து அடிக்கடி பதிவிட்டு வருவதனால் ஆண் மற்றும் பெண் பெயர்களில் அடிக்கடி அங்கு சென்று நிலமைகளை அவதானிப்பதுண்டு. சில இளம் பெண்கள் தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். திருமணமான பெண்கள்கூட விதிவிலக்கல்ல. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம்கூட ஒதுக்குகிறார்கள்.

ஒருசில ஆண் நண்பர்களை அங்கே நான் நண்பர்களாக்கினேன். அவர்களிடம் இவ்விடயங்களை கேட்டேன் அவர்கள் சொன்ன பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவ் இணையத்தளம் மூலம் பல செக்ஸ் நண்பிகளை தாம் பெற்றிருப்பதாகவும். அரட்டையில் பேசுவதுடன் மட்டும் நின்று விடாது. நேரடியாக செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல கிடைப்பதாகவும் குறிப்பிட்டனர். ஒரே நாட்டைச் சேர்ந்த பெண்கள் அரட்டையில் நண்பிகளாகக் கிடைத்தால் அரட்டையில் செக்ஸ் பேசுவோம் பின்னர் நேரடியாக சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வோம் என்றனர்.
இங்கு பல செக்ஸ் பைத்தியங்கள் சங்கமிக்கும் ஒரு இடமாக இருக்கின்றது. கடும் மோசமான முறையில் முறையில் அரட்டையில் ஈடுபடும் பல பெண்களை நாம் அங்கே காணலாம். நான் குறகிய நாட்கள் அத்தளத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிய அரட்டை செய்தாலும் பல பெண்களின் சுய ரூபங்களை பார்த்து கவலைப்பட்டதுண்டு. சில இளம் பெண்கள் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்பது தெரியவில்லை. 

அவ் இணையத்தில் திருமணமான இரு பெண்களின் நட்பு கிடைத்தது. ஒருவர் கனடா இருக்கின்றார். அவருக்கு ஒரு ஆண் ஒரு பெண் இரு பிள்ளைகள் சிறு வயது பிள்ளைகள் அவர் தினமும் இவ் இணையத்தில் அரட்டை செய்பவர் தன் முகத்தை காட்டமாட்டார். ஏன் இவ்வாறு நடக்கின்றீர்கள் என்று கேட்டேன். தான் இலங்கைப்பெண் தனது பெற்றோர் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து கனடாவிற்கு அனுப்பி வைத்திரக்கின்றனர். அங்கே சென்றதும் சொர்க்கம் போன்று இருந்ததாம்.  

கணவன் வேலைக்கு சென்று விடுவார் இரவு 12 மணிக்குப் பின்னர் வந்து சாப்பிட்டு விட்டு தூங்கிவிடுவாராம். வெளியில் ஒரு இடமும் செல்வதுமில்லை. அப்போது தனிமையில் இருக்கும் அவருக்கு இந்த இணையத்தளம் உதவியாக இருக்கிறதாம் பல நட்புக்களோடு தினமும் பேசி மகிழ்வதோடு தனிமையில் இருக்கும் உணர்வில் இருந்து விலகுவதாகவும் சொன்னார். தன் உணர்வுகளை கட்டப்படுத்த முடியாதபோது கணவன் இடங்கொடப்பதில்லை எனவும் வேலை வேலை என்றே இருப்பதாகவும் இவ்வாறான வேளைகளில் இவ் இணையத்தளத்தில் செக்ஸ் அரட்டைக்கு தான் செல்வதாகவும்  குறிப்பிட்டார்

இன்னுமொரு பெண் இளம்பெண் 27 வயது திருமணமாகி 2 வருடங்கள்தான் இலங்கைப்பெண் தனிமையில் இருக்கின்றார். அழகான பெண் கணவன் வேலைக்கு சென்றால் ஒரு வாரத்தின் பின்னர்தான் விட்டுக்கு வருவாராம். அப்படியானால் தனிமையில் இருக்கும் பெண் என்ன செய்வாள். இதனைவிட பல பாடசாலை செல்லும் மாணவிகள்கூட இங்கு அரட்டை அடிக்கின்றனர்.

லங்காசிறி இணையத்தள நிர்வாகிகளிடம் சில கேள்விகள்….

தமிழர்களுக்காகவும் தமிழீழத்தக்காகவும் கலாசாரத்தக்காகவும் குரல் கொடுப்பதாக சொல்லப்படுகின்ற நீங்கள் இதனை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றிர்கள். இது சமூக சீர்கேடடு இல்லையா? இவ் இணையத்தளத்தினை நீங்கள் நடாத்தவதன் நோக்கம் என்ன? இவ் அரட்டை இணையத்தளம் முலமாக ஏதாவது நல்ல விடயங்கள் இடம்பெறுகின்றதா? மறைமுகமாக விபச்சார கம்பனிகளை நடாத்தகின்றீர்களா?

இவ்வாறு உங்கள் பிள்ளைகள் மனைவி அக்கா தங்கைகள் ஆடைகளைக் களைந்து இன்னொருவருக்கு காட்டுவதற்கு இடங்கொடுப்பீர்களா? 

இவ்வாறு தரங்கெட்ட மானங்கெட்ட வேலை செய்வதனைவிட பணம் உழைக்க விரும்பினால் ஏனைய பெண்களின் ஆடைகளை களைந்து பணம் உழைப்பதை விடத்து உங்கள் மனைவி பிள்ளைகள் அக்கா தங்கைகளை வைத்து விபச்சார விடுதி நடாத்தி பணம் உழைக்கலாம்.

படத்தை கிளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கவும் 


இங்கு படத்தில் இருக்கும் பிரியவும் நான்தான் தாரணியும் நான்தான்

இதனையும் பாருங்கள்.

காம லீலைகள் அரங்கேறும் களம்


தொடர்ந்தும் அவதானிப்போம்… தொடருவோம்…


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "ஆடைகளை களைந்து இன்பம்காண அழைக்கும் தமிழ் இணையத்தளம் பெண்கள் உசார்… படங்கள் இணைப்பு"

மாலதி said...

vanakkam unkalin intha mikasirantha echarikkai vidukkum katurai kanden viyakkiren ippai patta seerkedukal inku nadaiperukirathu unmaiyil ithu kevalamanathuthaan. porumaiyaka ambalap paduththuvom nandri

சந்ரு said...

என் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை.

Post a Comment