வியாழன், 31 டிசம்பர், 2009

வாழ்க பல்லாண்டு...



 அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்த்துக்கள்

  இந்த 2009 ஆனது பலருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கலாம். சிலருக்கு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். இது எப்படி இருப்பினும் பிறக்க இருக்கின்ற புதுவருடம் அனைவருக்கும் சந்தோசமான ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

2009 எனைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் அதிக, கவலைகளையும், வேதனைகளையும் ஏற்படுத்திய ஆண்டாக இருக்கின்றது. பொதுவாக சொல்லப்போனால் இந்த 2009 எனக்கு நல்ல ஒரு ஆண்டாக அமையவில்லை. என்னை அதிக சங்கடத்தில் ஆழ்த்திய வருடமாகவும் இருக்கின்றது. நான்
 இந்த ஆண்டிலேயே சந்தோசப்பட்ட  நாட்களைவிட கவலைப் பட்ட நாட்களே அதிகம்.

  பிறக்கின்ற புது வருடமானது நல்ல ஒரு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.  பிறக்கின்ற புதுவருடம் அனைவர் மனதிலும் சந்தோசத்தை ஏற்படுத்தும் ஒரு ஆண்டாக அமைவதோடு அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

பூவுக்கு பிறந்த நாள்....
நான்காவது பிறந்த நாளை இன்று கொண்டாடும்  

செல்லக் குட்டி பிரபாகரன் அரிஷ்விஜா

 



எனக்கு மூஞ்சிப்  புத்தகம்  மூலம் முதன் முதலில் கிடைத்த ஒரு நண்பி டென்மார்க்கை சேர்ந்த திருமகள் பிரபா. இவர் எனக்கு ஒரு நண்பியாக என்பதனைவிட எனக்கு கிடைத்த ஒரு உடன் பிறவா அக்காவாக இருக்கின்றார். எனது வலைப்பதிவை தான் அறிந்த அனைவருக்கும் அறிமுகம் செய்தவர். இவரது அன்பு மகள் பிரபாகரன் அரிஷ்விஜா இன்று தனது நான்காவது பிறந்த தினத்தை டென்மார்க்கிலே இருக்கின்ற தனது வீட்டிலே மிக விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.


அரிஷ்விஜாவை சகல கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "வாழ்க பல்லாண்டு..."

ஜெரி ஈசானந்தா. சொன்னது…

குட்டிசெல்லம் விஜா வுக்கு,கட்டிமுத்தம் .[மதுரையிலிருந்து

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள சந்ரு

S.A. நவாஸுதீன் சொன்னது…

குட்டி தேவதை அரிஷ்விஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Subankan சொன்னது…

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சுட்டிப்பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் சொல்லும்போது மனதுக்குள் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஜாவை அம்மம்மா, அப்பப்பா... என்று பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் K S ராஜா சொல்லும் குரல் கேட்கிறது...!

வால்பையன் சொன்னது…

அரிஷ்விஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

குட்டி தேவதை அரிஷ்விஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்றிட என் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அக்பர் சொன்னது…

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நிலாமதி சொன்னது…

கடந்த வருட துன்பங்கள் களைந்து புதியவருடம் உங்களுக்கு மகிழ்வானதாக
புதியநல்ல மாற்றங்கள் உள்ளதாக அமைய பிரார்த்திக்கிறேன்.
நட்புடன் நிலாமதி அக்கா

கருத்துரையிடுக

a