Thursday, 17 December 2009

சந்தோசத்தில் வேட்டைக்காரன் விஜய்



அண்மைக் காலத்தில் வேட்டைக்காரன் மிதான எதிர்ப்பலைகள் விஜயின் மனதிலே சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது விஜய் மிகவும் சந்தோசத்துடனும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையோடும் இருக்கின்றார்.

இந்த சந்தோசத்துக்கான காரணம் வேறு ஒன்றுமில்லை. வேட்டைக்காரன் திரைப்படத்தினை. தானும் தனது குடும்பத்தினரும், நண்பர்களும்  பார்த்திருக்கின்றனர். வேட்டைக்காரனை பார்ப்பதற்கு முன்னர் விஜய் பரபரப்பாகக் காணப் பட்டாலும். வேட்டைக்காரனை பார்த்ததுமே விஜய் முகத்திலே ஒரு சந்தோசமும், உற்சாகமும் தென்பட்டதாக நண்பர்கள் சொல்கின்றனர். விஜய் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் வேட்டைக்காரன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க தன்னை ஒப்பந்தம் போடும் யாராக இருந்தாலும் ஒப்பந்தம் போடும்போதே நேரடியாக விநியோகஸ்தர்களுக்கே விற்க வேண்டும் என்று கண்டிசனையும் அறிவித்துவிட்டார் விஜய்.


இதற்கான காரணம் வேட்டைக்காரன் ஏற்படுத்திய கசப்பான அனுபவமே. ஏ.வி.எம் தயாரித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை  சன்பிக்சர்ஸிடம் விற்றுவிட்டு ஏ.வி.எம் ஒதுங்கிக் கொண்டது.  இது இவ்வாறிருக்க வேட்டைக்காரனில் சில காட்சிகளை சன்பிக்சர்ஷ் வெட்டி விட்டதாக சில செய்திகள் விஜயை சென்றடைந்தன.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் வேட்டைக்காரன் படத்தினை பார்க்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சொல்லி இருக்கிறார். தந்தை ஏ.வி.எம் க்கு சொல்லி இருக்கிறார்.ஏ.வி.எம் எதுவும் எங்களிடம் இல்லை எல்லா உரிமையும் சன்பிக்சர்ஸிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சன்பிக்சர்ஸ்க்கு அழைப்பை எடுத்து விஜய் வேட்டைக்காரன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் என்ற விடயங்களை அறிவித்திருக்கின்றனர்.

சன்பிக்சர்ஷ் மறுத்துவிட்டது. இதனால் விஜய் மட்டுமல்ல பலரும் சன்பிக்சர்ஸ் மீது கோபப்பட்டிருக்கின்றனர். கோபப்பட்டவர்களை தயாரிப்புக் குழு சமாதானப் படுத்தி இருக்கிறது.

வேட்டைக்காரனால்  வந்த கசப்பான  அனுபவங்களினால் சன் பிக்சர்ஸ் மட்டுமல்ல , எந்த ஒரு தனிப்பட்ட பெரிய விநியோக கம்பெனியிடமும் தயாரிப்பாளர் விற்க முடியாது என்று விஜய் அறிவித்து இருக்கிறார்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

18 comments: on "சந்தோசத்தில் வேட்டைக்காரன் விஜய்"

Anonymous said...

வேட்டைக்காரன் தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவான் என்பதில் சந்தேகமில்லை.

தர்ஷன்

புல்லட் said...

அப்போ இண்டைக்கு இரவு போறீங்களா ? நடுச்சாமம் வேட்டைக்காரன் வாறாராம்.. ;-)

S.A. நவாஸுதீன் said...

விஜய்க்கு ஒரு பெரிய வெற்றி தேவைதான். வேட்டைக்காரன் வெற்றி பெறட்டும்.

கனககோபி said...

ஏனய்யா ஒரு படத்துக்கு இவ்வளவு மிகை எதிர்பார்ப்பை உண்டாக்கி படத்திற்கு ஆப்பை உண்டாக்குகிறீர்கள்...

படம் வந்ததும் எழுதுங்கள்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// S.A. நவாஸுதீன் on 16 டிசம்பர், 2009 10:05 pm சொன்னது…

விஜய்க்கு ஒரு பெரிய வெற்றி தேவைதான். வேட்டைக்காரன் வெற்றி பெறட்டும். ////

repeateeeee.....

ஸ்ரீராம். said...

Voted
வேட்டைக் காரனை விட்டு வெளியே வாங்க பாஸ்.

அதி பிரதாபன் said...

ரெண்டாவது படம் தெளிவா இருக்கு.

சந்ரு said...

//பெயரில்லா கூறியது...
வேட்டைக்காரன் தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவான் என்பதில் சந்தேகமில்லை.

தர்ஷன்//

வெற்றி பெறும். கருத்துக்களுக்கு நன்றிகள்..

சந்ரு said...

//புல்லட் கூறியது...
அப்போ இண்டைக்கு இரவு போறீங்களா ? நடுச்சாமம் வேட்டைக்காரன் வாறாராம்.. ;-)//

என்னது... வேட்டைக்காரன் இப்போ வந்தாலும் போக தயார்.

சந்ரு said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
விஜய்க்கு ஒரு பெரிய வெற்றி தேவைதான். வேட்டைக்காரன் வெற்றி பெறட்டும்.//

வெற்றி பெறும். கருத்துக்களுக்கு நன்றிகள்..

சந்ரு said...

//கனககோபி கூறியது...
ஏனய்யா ஒரு படத்துக்கு இவ்வளவு மிகை எதிர்பார்ப்பை உண்டாக்கி படத்திற்கு ஆப்பை உண்டாக்குகிறீர்கள்...

படம் வந்ததும் எழுதுங்கள்...//


இது மிகை எதிர் எதிபார்ப்புமல்ல. ஆப்பை உண்டாக்கவுமல்ல. ஆப்பு வைத்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சி.

இன்று எழுதுவோம் நாளையும் எழுதுவோம் எப்போதும் எழுதுவோம் வேட்டைக்காறனைப் பற்றி

சந்ரு said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
/// S.A. நவாஸுதீன் on 16 டிசம்பர், 2009 10:05 pm சொன்னது…

விஜய்க்கு ஒரு பெரிய வெற்றி தேவைதான். வேட்டைக்காரன் வெற்றி பெறட்டும். ////

repeateeeee.....//

வெற்றி பெறும். கருத்துக்களுக்கு நன்றிகள்..

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...
Voted
வேட்டைக் காரனை விட்டு வெளியே வாங்க பாஸ்.//

வந்துவிடுகிறேன்... என் அடுத்த இடுகை வேட்டைக்காரன் பற்றியதல்ல...

சந்ரு said...

//அதி பிரதாபன் கூறியது...
ரெண்டாவது படம் தெளிவா இருக்கு.//

விஜய் என்றால் தெளிவாத்தானே இருப்பார். வேட்டைக்காரன் வெற்றி பெறும் என்று நாங்களும் தெளிவா இருக்கிறோம்.

Anonymous said...

அப்போ கொஞ்சநாளைக்கு இறச்சிக்குபஞ்சமே இல்லையாக்கும் அண்ணா வியை[கசாப்புக்கடக்கறண்ண]ட்ட சொல்லீருங்க சிறப்புத்தள்ளு படீல இறச்சி எல்லாம் விக்கணும் எண்டு

இந்தப்படத்தில வியை=இளையகசாப்புக்கடக்காறனா வாறானாமே

Azhagan said...

But I read in an article that Vijay's next project "sura" ia also with Sunpictures.

senthils said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.

Post a Comment